சிகிச்சையின் போது நர்சுக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 September 2022

சிகிச்சையின் போது நர்சுக்கு முத்தம் கொடுத்த வாலிபர் கைது.

photo_2022-09-21_11-16-52
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிபின் (வயது 30), தொழிலாளி, இவரது காலில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கொல்லங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். 


அவரது காலில் மருந்து போட்டு கட்ட டாக்டர் பரிந்துரை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கு நர்சாக பணியாற்றி வந்த 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் சிபினின் காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து போட்டு கட்டி கொண்டிருந்தார்.


அப்போது திடீரென சிபின், கட்டுப்போட்டுக்கு கொண்டிருந்த நர்சுக்கு முத்தம் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத நர்சு அதிர்ச்சி அடைந்து அலறினார், அவரது அலறல் சத்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்த பணியாளர்களும், சிகிச்சைக்கு வந்தவர்கள் அங்கு திரண்டனர். இதற்கிடையே சிபின் அங்கிருந்து ஓடி விட்டார்.


இதுகுறித்து அந்த நர்சு கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிபினை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

No comments:

Post a Comment