ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்கள் நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 September 2022

ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்கள் நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கம்.

தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு: ஓணம் பண்டிகையையொட்டி 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ரயில் எண்: 06201 மைசூரு ஜங்ஷன் - திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் மைசூரு ஜங்னில் இருந்து இன்று பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலை 8 ம் தேதி காலை 7. 30 க்கு வந்தடையும். இந்த ரயில் நாகர்கோவில் டவுனுக்கு காலை 5. 58 க்கு வந்து சேரும். 


ரயில் எண்: 06202 திருவனந்தபுரம் சென்ட்ரல் -மைசூரு ஜங்ஷன் சிறப்பு ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து 8 ம் தேதி மதியம் 12. 45 மணிக்கு புறப்பட்டு மைசூருக்கு மறுநாள் காலை 11. 45 மணிக்கு சென்று சேரும். இந்த ரயில் நாகர்கோவில் டவுன்க்கு பிற்பகல் 2. 15க்கு வந்து 2. 17 க்கு புறப்படும். 


ரயில் எண் 06052 திருநெல்வேலி ஜங்ஷன் பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 10 ம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 4 மணிக்கு பெங்களூரு கண்டோன் மென்ட் சென்றடையும். 


இந்த ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திற்கு காலை 9. 25 க்கு வந்து 9. 27 க்கு புறப்படும். பாறசாலை, திருவனந்தபுரம் சென்ட்ரல் வழியாக செல்லும். 

No comments:

Post a Comment