காந்தியடிகளின் 154-வது பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலுள்ள அன்னாரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் அன்னாரது திருவுருவ படத்திற்க்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பாரளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணை பொதுச் செயலாளர் பூதலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். ஆஸ்தி மீது படும் அபூர்வ சூரிய ஒளியினையும் கண்டுகளித்தனர் வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குவிந்தனர்.
காமராஜரின் 47 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை;
அதன் பிறகு கன்னியாகுமரியில் அமைந்துள்ள காமராஜர் நினைவு மண்டபத்தில் காமராஜரின் 47 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் எஸ் பி ஹரிகிரன் பிரசாத் , பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment