நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை வகித்தார். ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வகித்தனர்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி தண்ணீர் வரி கட்டுவதில் விளக்கு அளிக்க வேண்டும். மாநகராட்சி கவுன்சிலுக்கு புதிய சட்டம் இயற்ற அதிகாரம் இருக்கிறது. அதை பயன்படுத்தி ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் தங்களது வார்டுகளில் ரூ.50000 அளவிளான சின்ன சின்ன வேலைகளை செய்ய அதிகாரம் சட்டத்தை இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற காரசார விவாதம் நடைபெற்றது. இதில் 52 வார்டு கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment