கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மேலப் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் கூலி தொழில் செய்து வருகிறார் இவருடைய மகன் கோபி நிஷாந்த் பட்டதாரி இளைஞர். இவர் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து நேபாளம் வரை இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நடைபயணம் ஒன்றை தொடங்கினார்.
23 நாட்களில் 2600 கிலோமீட்டர் தூரம் கடந்து நேபாளத்தை சென்றடைந்த கோபி நிஷாந்த் இன்று கன்னியாகுமரி மாவட்டம் வருகை புரிந்தார். அவருக்கு குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர்கள் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.

கடந்தாண்டு இதேபோல் கன்னியாகுமரி முதல் லடாக் வரை சென்று பின்னர் லடாக்கில் இருந்து கன்னியாகுமரி வரை 4000 கிலோமீட்டர் நடந்து சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வசதி படைத்தவர்கள் நாடு முழுவதும் சுற்றிப் பார்ப்பதற்கு முடியும் ஆனால் ஏழை எளிய மாணவர்கள் இளைஞர்களால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவே மிகவும் கடினமான சூழ்நிலை இருப்பதால் தன்னம்பிக்கை இருந்தால் நடந்தே சென்று நாடு முழுவதும் சுற்றிப் பார்க்கலாம் அதற்காகதான் இந்த பயணம் என்றார்.

No comments:
Post a Comment