தற்போது நெடுஞ்சாலை துறை மூலம் மேற்படி ஏழை தலித் மக்களின் குடியிருப்புகளை இன்று 11-10-2022 அகற்ற உத்தரவிட்டுள்ளது. குடியிருப்புகளை அகற்றுவதற்கு முன்பு அவர்களுக்கு குடியிருப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்காமல் உடனடியாக அவசர கதியில் தலித் மக்களை அப்பகுதியை விட்டு வெளியேற்றினால் தலித் மக்கள் குடியிருக்க வீடுகள் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை உருவாகும்.
தினம் ஒரு வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை தலித் மக்களை குடியிருப்புகளை விட்டு வெளியேறுங்கள் என்று கூறுவது சட்டவிரோதம் குமரி மாவட்ட நிர்வாகம் மேற்படி ஒழுங்கினசேரி பகுதியில் வசிக்கும் 11 தலித் ஏழை தலித் குடும்பங்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கி குடியிருக்க வசதி செய்து கொடுத்த பின்பு மேற்படி குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வை.தினகரன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை அறிவித்து போராட்டம் நடத்த வந்தனர்.
அப்போது குமரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வை.தினகரனிடம் மேற்படி மக்களுக்கு மாற்று குடியிருப்பு இடம் வழங்கிய பின்பே குடியிருப்பு அகற்றப்படும் என்று உறுதி அளித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறினார். போர்க்கால அடிப்படையில் மேற்படி மக்களுக்கு மாற்று குடியிருப்பு இடம் வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை மூலமாக வை.தினகரன் வலியுறுத்தினார்.

No comments:
Post a Comment