கன்னியாகுமரி மாவட்டம், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரை படியும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதல் படியும் முதியோர் தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து கெளரவிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியரும், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலருமான க.சேதுராமலிங்கம் மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியரும், உதவி வாக்காளர் பதிவு அலுவலருமான சேகர் ஆகியோர் முதியோர் தினத்தை முன்னிட்டு 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களான மூத்த குடிமக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ் வழங்கி, கௌரவித்தார்கள்.

No comments:
Post a Comment