ஆனால் இன்று வரை அதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் இருப்பதால் எங்களுடைய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட குழு சார்பாக இந்த சிலை அமைத்து தர வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சீர்மரபினர் நல வாரியம் தனியாக இயங்கி வருகிறது அதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியம் செயல்படவில்லை என்பது எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது.

எனவே கன்னியாகுமரி மாவட்டத்திலும் சீர்மரபினர் நல வாரியம் அமைத்து எங்களது மக்களுக்கான சலுகைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அதைப்போன்று மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெ ஜெயலலிதா அவர்கள் கள்ளர் மறவர் அகமுடையார் ஆகிய மூவரையும் ஒன்றாக இணைத்து தேவர் இனம் என்று ஒரு அரசாணை வெளியீடு செய்திருந்தார்.
அதை இன்று வரை நடைமுறைபடுத்தவில்லை அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா மு.கஸ்டாலின் அவர்களிடம் இந்த 115-வது தேவர் ஜெயந்திவிழா மற்றும் 60-வது குருபூஜை விழா நடைபெறும் இந்த தருணத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கன்னியாகுமரி மாவட்ட குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
.jpg)
No comments:
Post a Comment