நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 October 2022

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சி.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்படும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.


தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்துறை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம் மக்களை தேடி மருத்துவம் கூட்டுறவு வங்கிகளின் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி திட்டம் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.


இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் காணி பழங்குடியினர்களுக்கு நில உரிமை ஆணை வழங்கியது. மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு கடன் உதவிகள் வழங்கியது. முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டம் புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி பொது மக்கள் பார்வையிட்டனர். 

No comments:

Post a Comment