குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 October 2022

குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்.

குமரி மாவட்டத்தில் அத்தியாவசிய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து உயர்மட்ட அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கின் நேற்று நடைபெற்றது.


இதில் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை ஊரக வளர்ச்சி முகமை மகளிர் திட்டம் மாநகராட்சி நகராட்சிகள் பேரூராட்சிகள் ஊராட்சிகள் வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை வேளாண்மை பொறியியல் துறை மின்சார துறை மீன்வளத்துறை போக்குவரத்து துறை காவல் துறை கூட்டுறவு துறை உள்பட்ட பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும் முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கட்டடம் கடல் அரிப்பு தடுப்பு கோட்டம் நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடிந்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் இருந்தால் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா மாவட்ட வன அலுவலர் இளையராஜா பத்மநாதபுரம் சார் ஆட்சியர் அலர்மேல் மங்கை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் திட்ட இயக்குனர்கள், ச.சா.தனபதி, மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீரசாமி நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தனித்துறை ஆட்சியர் திருப்பதி ,உட்பட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment