இந்த திருவிழா திருப்பலி நிறைவில் ஒவ்வொரு நாட்களும் விழாவை சிறப்பிக்கின்றவர்கள் தங்களது கொண்டாட்டங்களை நிகழ்வாக கொண்டாடுகிறார்கள் குறிப்பாக 3-ம் திருவிழா அன்று மாலை சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது 7-ம் திருவிழா அன்று மாலை வேளையில் சிறார் இயக்க குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது அன்றைய தினம் பங்கு சமூகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் நிறுவன பணியாளர்கள் 10-மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற குழந்தைகளுக்கு பரிசிகள் வழங்குகின்றார்கள்.
5-ம் திருவிழா அன்று இரவு 8:30 மணி அளவில் மரியாவின் சேனையினுடைய ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது, 8-ம் திருவிழா அன்று காலை 10:30 மணிக்கு குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்களுடைய நிறுவனர்கள், பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவும், திருவிழா பரிசும் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் 11:30 மணியளவில் சமபந்தி விருந்து நடைபெறுகிறது.
மேற்பட்ட மக்கள் அந்த நிகழ்வில் 6000-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு சிறப்பிக்க வருகிறார்கள். 9-ம் திருவிழா அன்று இரவு 8:30 மணி அளவில் தேர் பவனி நடைபெறுகிறது பத்தாம் திருவிழா அன்று காலையில் 6- மணிக்கு திருவிழா திருப்பலியும் அதனை தொடர்ந்து 8-30 மணிக்கு ஆங்கில திருப்பலியும் 10- மணிக்கு மலையாள திருப்பலியும் அதனை தொடர்ந்து தேர் பவணியும் நடைபெறுகிறது. இறை மக்களாகிய அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இறைவனின் அருளை பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை அருட்பணி குருசு கார்மல் சி.ஏ அவர்களும் அவரோடு இணைந்து ஊர் நிர்வாகிகளும் பங்கு இறை மக்களும் செய்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment