கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கட்டிட உறுதி தன்மையை ஆராய மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 October 2022

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கட்டிட உறுதி தன்மையை ஆராய மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.


நாகர்கோவிலில் மாநகராட்சி மற்றும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தார் சானல் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களுக்கு கூறியதாவது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி. பேரூராட்சிகள். மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்ட நாகர்கோவில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட வகுப்பறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த பகுதியினை சீரமைக்குமாறு துரை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 


சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இடலாக்குடி அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தினையும் பார்வையிட்டு கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறிந்தார். ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திக்காட்டு விலை ஊராட்சி சீயோன் புறம் அரசு தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் கனியாகுளம் ஊராட்சி புலியடி அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் புதிதாக அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தினையும் ஆய்வு மேற்கொண்டு அக்கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து தலைமை ஆசிரியர் அவர்களிடம் துரை சார்ந்த அலுவலர்களிடமும் கேட்டறிவிக்கப்பட்டது. 


வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எந்தவித விபரீத பாதிப்பும் ஏற்படாத வகையில் பலர் இந்த கட்டிடங்களை விரிவுபடுத்த வேண்டும் மிகவும் பழுமை அடைந்த கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து தர்மபுரம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அத்திக்காட்டு கால்வாயினை தூர்வாரும் பணியினை நேரில் பார்வையிட்டு வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரை வீணாக்காமல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார் .


ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தணபதி .ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர். தலைமை ஆசிரியர். மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment