கன்னியாகுமரி விரைவு ரயிலில் கோளாறு நடுவழியில் பயணிகள் தவிப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 October 2022

கன்னியாகுமரி விரைவு ரயிலில் கோளாறு நடுவழியில் பயணிகள் தவிப்பு.

சென்னையிலிருந்து புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் நடுவழியில் நிற்பதால் பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை புறப்பட்ட ரயில் இன்று அதிகாலை நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றபோது ரயிலின் இரண்டாவது பெட்டி துண்டிக்கப்பட்டது.


இந்த பெட்டியை ரயிலில் இணைக்கும் பணியில் இரண்டு மணிநேரமாக ரயில்வே ஊழியர்கள் முயற்சித்தும் பெட்டியை இணைக்க முடியாததால் அந்த பெட்டியை மட்டும் கழற்றிவிட்டு ரயிலை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மணிநேரமாக ரயில் ஒரே இடத்தில் நின்றதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

No comments:

Post a Comment