வைக்கோல் ஏற்றி வந்த டெம்போ மின்கம்பி உரசி தீ பற்றி எரிந்து நாசம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 October 2022

வைக்கோல் ஏற்றி வந்த டெம்போ மின்கம்பி உரசி தீ பற்றி எரிந்து நாசம்.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஜெகன்ராஜ் இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வருகிறார் இவருக்கு சொந்தமான டெம்போவில் நேற்று இரவு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து களியக்காவிளை சந்தைக்கு வைக்கோல் பாரம் ஏற்றி வந்துள்ளார்.


பின்னர் இரவு புலியூர்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் டெம்போவை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு வில்லுக்குறியில் உள்ள வீட்டில் ஜெகன்ராஜ் தூங்க சென்றுள்ளார், பின்னர் அதிகாலை சுமார் மூன்று மணியளவில் அந்த வழியாக சென்ற ஜெகன்ராஜின் உறவினர் வைக்கோல் லோடு ஏற்றி வந்த டெம்போ தீ பற்றி எரிவதை கண்டு அவருக்கு தகவல் தெரிவித்தார்.


அங்கு வந்த ஜெகன்ராஜ் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் அங்கு விரைந்து வந்த தக்கலை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், வைக்கோல் லோடு என்பதால் தீ டெம்போ முழுவதும் பரவி தீ கொழுந்து விட்டு எரிந்தது பின்னர் உதவிக்கு மண்டைக்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இரு நிலைய தீயணைப்பு வீரர்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். 


இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கம்பி உரசி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment