கன்னியாகுமரி மாவட்ட SDPI கட்சி செய்தி அறிக்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 October 2022

கன்னியாகுமரி மாவட்ட SDPI கட்சி செய்தி அறிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகில் கிறிஸ்தவ சபை வழிபாட்டு தலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற சமூக விரோதிகளின் அத்துமீறல் சபை நிர்வாகியை சந்தித்து நடந்த நிகழ்வுகளை கேட்டறிந்த SDPI மாவட்ட நிர்வாகிகள்.


கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகில் கடந்த 31-ஆண்டாக நடைபெற்றுவரும் சபையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இந்து முண்ணனி கொடியோடு புகுந்து சபையை நடத்த விடாமல் செய்த விசயமாக SDPI கட்சியின் மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமையில் மாவட்ட துணை தலைவர் ஜாஹிர்ஹுசைன்,  மாவட்ட பொது செயலாளர் மணவை சாதிக் அலி,  குளச்சல் தொகுதி துணை தலைவர் மஜிதுல் அர்ஷாத், SDPI கட்சியின் மீனவர் அணி மாவட்ட துணை தலைவர் பிரின்ஸ் ஆன்றனி ஆகியோர் சம்பந்த பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டு சபை நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினர்.


இதில் சபை கடந்த 31 வருடமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் நடைபெற்று வருகிறது என்று தெரிந்து கொண்டோம், ஆனால் சமீப காலமாக சிலர் பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றனர். காரணம் பற்றி விளக்கிய அப்பகுதியை சார்ந்த பெண் இங்கே (தெருவில்)  மின்விளக்கு போடுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையை மத பிரச்சனையாக சிலர் உருவாக்குகின்றனர் என்றார்.


சபை அருகாமையில் உள்ள மின் கம்பத்தில் மின் விளக்கு பொருத்த அப்பகுதி கவுன்சிலரிடம் (பாஜக) பலமுறை சொல்லியும் மின் விளக்கு அமைக்கப்படாததால் திமுக பிரமுகரிடம் சபையினர் கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெருவித்து சம்பந்தபட்ட பகுதியை சார்ந்த சிலர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.


இதை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் கடந்த சில வாரமாக வழிபாடு நடக்கும் போது சபைக்குள் சென்று வழிபாடை தடுத்துள்ளனர், புகார் காவல்துறையிடம் செல்லவே இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில்  எதிர் தரப்பு ஒத்துழைக்காததால் சபை அனுமதி இல்லை வெளியூர் வாசிகள் இங்கே வந்து வழிபட கூடாது போன்ற கருத்துக்களை முன்வைத்து பிரச்சனையை பூதாகர மாக்கியுள்ளனர்.


இதனை தொடர்ந்து தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றார், நாம் சென்று பார்த்தது வரை சபை கட்டிடம் ஊருக்கு வெளியில் கடற்கரையோரம் இருக்கிறது பக்கத்தில் ஒரு சில வீடுகள் அதுவும் சபையை விட்டு பல நூறு மீட்டர் தள்ளியே இருக்கிறது. வெறும் 18 அல்லது 20 குடும்பங்களே இந்த சபைக்கு உட்பட்டு இருக்கின்றனர். யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாத பகுதி இது. 


முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திலேயே மத மோதலை தூண்டும் விதத்தில் தேவை இல்லாத பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளனர், காவல்துறை சரியாக பிரச்சனையை அனுகும் என்றால் அங்கே எந்த பிரச்சனையும் எழ வாய்ப்பு இல்லை. 31 வருடமாக அப்பகுதியில் இந்த சபை இருக்கிறது இடையில் சுனாமி தாக்குதலில் சிதிலமடைந்ததை கடந்த 2019 ல் மறு சீரமைப்பு செய்துள்ளனர் இதை வைத்து அனுமதி இல்லாமல் இயங்குகிறது என்ற கருத்தை ஏற்றுகொள்ள முடியாது.


அதேபோல் ஒரு வழிபாட்டு தலத்திற்கு இன்னார்கள் தான் வரனும் வரகூடாது என்று யாரும் தீர்மானிக்க முடியாது, அது போல் பிரச்சனைகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர சட்டத்தை இந்து முண்ணனி யினர் கையிலெடுத்து ஒரு வழிபாட்டு தலத்தில் அத்துமீறி நுழைவது எந்த விதத்திலும் சகித்து கொள்ள முடியாது. 


மேலும் இச்சம்பவத்தில் சில குடும்பமாக வசிக்கும் அப்பகுதி வாசிகள் (சபை வாசிகள்) கடும் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர், காவல்துறையும் பிரச்சனையை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்ற ரீதியில் அனுகுவது போல் நடவடிக்கைகள் இருக்கிறது, குறிப்பாக வழிபாடு நடத்த மாட்டோம் என எழுதி கேட்பதாகவும் சபையில் வழிபாடு நடத்தியவரின் கைபேசியை பறித்து  சென்றுள்ளதாகவும் சபைக்கு வருபவர்களை மிரட்டும் தோணியில் ஆராதனையில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவோம் என்பதாகவும் அத்துமீறி பிரச்சனையை ஏற்படுத்த வரும் சமூக விரோதிகளை தடுக்காமல் சபை க்குள் நுழையும் வரை தடுக்காமல் இருப்பதாகவும் காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் அப்பகுதியினர் குறைகூறுகின்றனர்.


SDPI கட்சியின் சார்பில் சட்ட ரீதியில் சபையினருக்கு துணை நிற்பதற்கும் அப்பகுதியில் ஒரு தாய் பிள்ளையாக வாழும் கிறிஸ்தவ இந்து சமுதாய மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கவும் ஒத்துழைக்க உறுதி கூறினோம். மேலும் மாவட்ட காவல்துறை மத மோதலை உருவாக்கி அமைதி பூங்காவான குமரி மாவட்டதை கலவர காடாக மாற்ற துடிக்கும் இந்து முண்ணனி மற்றும் பாஜக வினர் முயல்வதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறது.

No comments:

Post a Comment