இதனை பார்த்த மாணவியின் உறவுக்கார பெண் ஒருவர் தனது செல்போனில் போட்டோ எடுக்க முயற்சி செய்தார், இதனை கண்ட மாணவி தன்னை ஏன் போட்டோ எடுத்தீர்கள்? என்று கூறி அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள கடைகாரர்கள் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று அங்கு நின்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். போலீசை கண்டதும் வாலிபரும் மாணவியும் அங்கிருந்து நைசாக நழுவி விட்டனர். இது போன்ற சம்பவம் காலை மற்றும் மாலை வேளையில் தக்கலை பஸ் நிலையத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே போலீசார் இந்த இரு வேளையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும் என அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment