கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 105. 4 மில்லி மீட்டரும் குறைந்த பட்சமாக ஆரல்வாய் மொழியில் 12. 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையோரப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணபட்டது
48 அடிகொள்ளவு கொண்ட அணையின்நீர்மட்டம் 44, 88அடியை எட்டியது தொடர்ந்து அணைக்கு 303கன அடி நீர் உள்வரத்து காணபட்டு வருகிறது இதையடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 4116கன அடிநீர் திறந்துவிடப் பட்டுள்ளதால் கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து,..
பாதுகாப்பு வேலியையும் தாண்டி கொட்டுவதால் 2 வது நாளாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பாக தடை விதிக்கபட்டுள்ளது. இதேபோல் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் மழை பெய்வதற்கான சூழல் தொடர்ந்து நிலவுவதால் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்தபடியாக தொடரும் இந்த மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரப்பர் தொழிலாளர்கள் இந்த மழை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் கட்டுமான தொழிலாளர்களும் இந்த தொடர் மழையால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படியான சூழலில் மாவட்டம் முழுதும் வானம் மேக மூட்டத்துடன் மழை பொழிவதற்கான சூழலே தொடர்ந்து நிலவி வருகிறது.

No comments:
Post a Comment