இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 October 2022

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம்.

கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரி கலையரங்கில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று  நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாமினை, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.


பின்னர்  பேசுகையில் படித்த இளைஞர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

No comments:

Post a Comment