தக்கலை அருகே உள்ள கொல்லன்விளை பகுதியில் சென்றபோது சாலையோரம் சந்தேகப்படும் வகையில் ஒரு கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் வாகனத்தின் பதிவு எண் அழிக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து அருகில் நின்ற நபரை அழைத்து காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தினார்.

அந்த நபர் மார்த்தாண்ட பகுதியை சேர்ந்த மெக்கானிக் என்பதும் லாரி பழுதாகி நிற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் பழுது நீக்க வந்ததாகவும் ஆனால் டிரைவரை காணவில்லை என்றும் கூறினார். இதை அடுத்து காவல் ஆய்வாளர் லாரியின் பின்பக்க கதவை திறந்து பார்த்தபோது அதில் மூடை மூடையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மேலும் அந்த மூடைகளில் விருதுநகர் மாவட்டம் வாணிபக் கழக ஸ்டிக்கர் இருந்தது.
இதனால் ரேஷன் அரிசி வெளி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு குமரி மாவட்டம் வழியாக கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. மேலும் போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓடியது தெரிந்தது பின்னர் லாரியுடன் மொத்தம் 20 டன் ரேஷன் அரிசியை காவல் ஆய்வாளர் நெப்போலியன் பறிமுதல் செய்தார் இதை அடுத்து இது பற்றி நாகர்கோவிலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் 20 டன் ரேஷன் அரிசியும் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மெக்கானிக்கை தொலைபேசியில் அழைத்த தொலைபேசி எண்ணை வாங்கி லாரி இன் டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


No comments:
Post a Comment