கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன் துறை அலுவலகம் சார்பில் உதவி இயக்குனர் நடராஜன் தலைமையில் நாட்டு படகு (வள்ளம்) மீனவர்களின் கருத்து கேட்பு கூட்டம் குளச்சல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மீன் துறை ஆய்வாளர் அக்னி குமார், லிபின் மேரி, கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் டங்ஸ்டன் மற்றும் ராஜகமங்கலம் முதல் நீரோடி வரை உள்ள நாட்டு படகு மீனவர் சங்க நிர்வாகிகள், மீன்பிடி தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆண்டுதோறும் நாட்டு படைகளை மீன் வளத்துறை ஆய்வு செய்வதை டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும், சில மீனவர்கள் ஜூலை மாதத்திற்கு மாற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.
நாட்டு படகு மீனு அவர்களின் இந்த கருத்துக்களை அதிகாரிகள் பதிவு செய்தனர். இந்த கருத்துக்கள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்படும் என முடிவு செய்யப்பட்டது.


No comments:
Post a Comment