இக் கூட்டத்தில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்து இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா, இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா, பொதுசிவில் சட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள், போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டனர். மாநில தலைவர் M.s சுலைமான் அதற்கான பதில்களை சான்றுகளுடன் விளக்கினார்.

எனது பார்வையில் இஸ்லாம் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடத்தி அதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கினர். கட்டுரை எழுதிய அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கினர். இந்த நிகழ்வில் மாநில செயலாளர் பைசல், யூசுஃப் அலி கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஹுசைன் ஜவாஹிரி, பொருளாளர் செய்யது அகமது கரீம், துணைத் தலைவர் முகம்மது யாசிர், துணை செயலாளர்கள் நூருல் அமீன், முகம்மது கியாசுதீன், முகம்மது ராபி, முகம்மது நிவாஸ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யஹ்யா, தொண்டர் அணி செயலாளர் ஆசிக் கோட்டார் கிளை செயலாளர் சகாப்தீன், பொருளாளர் ஷாஜகான், துணைத் தலைவர் நாஷித் அஹமத், துணைச் செயலாளர் கலிஃபா மாணவரணி இப்ராஹிம் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment