மாலத்தீவில் தீ விபத்தில் இருவர் பலி -உருக்கமான தகவல்கள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 11 November 2022

மாலத்தீவில் தீ விபத்தில் இருவர் பலி -உருக்கமான தகவல்கள்.

மாலத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இருவர் உள்ளனர், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடை சேர்ந்த பொன்னுமுத்து, மூன்றாவது மகன் எட்வின் ஜெனில் 43 இவர் மாலத்தீவில் 20 ஆண்டுகளுக்கு முன் சென்று கட்டுமான கான்ட்ராக்ட் பணி செய்து வருகிறார்.


ஆந்திராவைச் சேர்ந்த சுகுணா 40 வை 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார் ஆனால் குழந்தை இல்லை, இருவரும் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகின்றனர், அடுக்குமாடு குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வருகின்றனர் கடந்த டிசம்பர் மாதம் இருவரும் மார்த்தாண்டம் வந்துள்ளனர்.


கடந்த மாதம் தீபாவளிக்கு ஆந்திரா மாநிலம் அம்மாவின் வீட்டிற்கு சுகுணா மட்டும் வந்துள்ளார் சுமார் 25 நாட்கள் இருந்துவிட்டு நிரும்பி சென்றுள்ளார், தினசரி காலை எட்வின் ஜெனில் அம்மாவிடம் செல்போனில் பேசுவது வழக்கம் நேற்று காலை பேசவில்லை இதனால் அருகிலுள்ள அண்ணன் எட்வின் ஜெகனை தொடர்பு கொண்டுள்ளனர், எட்வின் ஜெனில் குடியிருக்கும் அடுக்குமாடி. குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு எட்வின் ஜெனில் மற்றும் சுகுணா உட்பட இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் பலியாகி உள்ளனர்.


உறவினர்கள் மாலத்தீவு வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு இருவரது உடலை சொந்த ஊரு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர், இதுகுறித்து இவரது தம்பி கூறியதாவது : தினசரி காலையில் அம்மாவிடம் எட்வின் ஜெனில் செல்போனில் பேசுவது உண்டு, அன்றுள்ள விவரங்களை கேட்டு தெரிந்து கொள்வார் இன்று பேசவில்லை இதனால் மாலத்தீவில் மற்றொரு அண்ணன் எட்வின் ஜெகனை தொடர்பு கொண்டோம், அப்பொழுதுதான் நேற்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது மின் கசிவால் இருக்குமோ என்று சந்தேகம் உள்ளது இதனால் முதல் தளத்தில் உள்ள இவர்களுக்கு தப்பி செல்ல முடியவில்லை.


இந்த குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர் அதிகமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவைச் சேர்ந்த ஒன்பது பேர் பலியாகி உள்ளார் என்று தெரிய வருகிறது ஆறு பேர் தப்பிவுள்ளனர் இருவரது உடல் அடையாளம் தெரிந்துள்ளது உடலையும் சொந்த ஊர் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment