இதில் சிறப்பு விருந்திரனாக மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதியும் கன்னியாகுமரி மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவின் செயலருமாகிய நீதிபதி நம்பிராஜன் கலந்துகொண்டு கூறியதாவது, மாணவிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு இந்தியாவில் மட்டும்தான் பாதுகாப்பு சட்டங்கள் அதிகம் உள்ளன அதில் வரதட்சனை தடை சட்டம், தமிழ்நாடு பெண்களை தொல்லை செய்தல் தடுப்பு சட்டம், மகளிர் தம்மை இழிவுபடுத்தி காட்டுவதை தடை செய்யும் சட்டம், பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் கொடுமை தடுப்பு சட்டம் என பெண்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளன.
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் இணையதள செயலிகளை அதிகமாக பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது தற்போது வாடிக்கையாக உள்ளது. தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தகவல்களுக்கு பதில் அளிப்தை தவிர்க்க வேண்டும் எனவும் இதனால் சமூக வலைதளங்களினால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

பெண்கள் தங்களுடைய துணையை தேர்வு செய்ய உரிமை இருக்கிறது என்றாலும் அதை தீவிரமாக ஆராய்ந்து எதிர்கால முடிவுகள் எடுப்பது நல்லது என்று கூறினார்.
இந்நிகழ்சியில் ஸ்காட் கிறிஸ்த்தவ கல்லூரி முதல்வர் திரு. J.R.V.எட்வர்ட் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். இக்கல்லூரியின் தாளாளர் பைஜீ நிஷாத் பால் அவர்கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயிலரங்கத்தின் நோக்கத்தை பற்றி விளக்கினார். இந்நிகழ்சியில் மூத்த வழக்கறிஞர் D. ஷகிலா பிரவீன் அவர்கள் கூறியதாவது நவம்பர் 25 சர்வதேச பெண்கள் மீதான வன்முறைகளை ஒழிப்பதற்கான தினத்தின் நோக்கத்தை விளக்கினார். மேலும் நிகழ்ச்சியில் கருத்துரை ஆற்றிய முன்னால் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க தலைவரும் RUC யின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் மரியஸ்டீபன் பேசுகையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தனி மனித உரிமைகளை பாதுகாக்கிறது ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகத்தில் வாழ்வதற்கான உரிமைகள் இருக்கிறது எனவும் அரசாங்கம் குடிமக்களுக்கு கிடைக்ககூடிய எல்லா உரிமைகளுக்கும் அரசே பொறுப்பு என்றும் தமிழ்நாட்டை தவிர வட மாநிலங்களில் பசி பட்டினி இன்றும் இருந்து வருகிறது இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் உணவு பற்றாகுறை என்பது இல்லாத நிலை வரவேண்டும் என்றும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புகள் குறித்தும் கருத்துரையாற்றினார்.
இந்நிகழச்சியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட இளங்கலை மூன்றாமாண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் RUC யின் திட்ட ஒருங்கிணைப்பாளர் லெட்சுமி தேவி வரவேற்புரையாற்றினார். ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆங்கில இலக்கிய துறை மாணவிகள் ஒருங்கிணைத்து நன்றியுரையும் கூறினார்கள்.

No comments:
Post a Comment