இதையடுத்து அவர் வசம் இருந்த மகளிரணிச் செயலாளர் பதவி யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது. திமுகவில் உள்ள முக்கிய பெண் பிரமுகர்கள் பலரும் இந்தப் பதவியை கைப்பற்ற முயற்சித்து வந்தனர்.ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கன்னியாகுமரி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சனுக்கு திமுக மகளிரணிச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளார் ஸ்டாலின்.

ஹெலன் டேவிட்சனை திமுக மகளிரணிச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்து அவரை ஸ்டாலினிடம் பரிந்துரை செய்ததே கனிமொழி எம்.பி. தான் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் ஹெலன் டேவிட்சனை பொறுத்தவரை நீண்ட காலமாக கனிமொழிக்கு பக்க பலமாக நின்று வருபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 2ஜி வழக்கில் கனிமொழி சிறைவாசம் அனுபவித்த போது ராஜாத்தி அம்மாளுக்கு ஹெலன் டேவிட்சன் துணையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் டெல்லியில் அவருக்கு தேவையான உதவிகளை செய்தவர் என்பதும் திரும்பிப் பார்க்கத் தக்கது. மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக ஆர்ப்பாட்டமின்றி அமைதியான சுபாவம் கொண்டவர் ஹெலன் டேவிட்சன் என்பதும் கனிமொழி அவரை தேர்வு செய்ததற்கான முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.


No comments:
Post a Comment