கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் அமைந்துள்ளது கல்குளம் அரசு தொடக்கப்பள்ளி இந்த பள்ளியில் ப்ரி கேஜ் முதல் 6-ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் உள்ள பழைய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிப்பறை கட்டிடங்கள் கழிந்த 1-வருடங்களுக்கு முன் இடிக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு தற்காலிக சிமென்ட் கூரை கொட்டகையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அந்த தற்காலிக கொட்டகையில் நச்சு விலங்குகளின் நடமாட்டம் இருப்பதாகவும் மாணவர்களுக்கு கழிப்பறைகள் இல்லாத நிலையில் மாற்று ஏற்பாடுகளும் அரசு சார்பில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
இந்த நிலையில் இன்று பள்ளிக்கு பெற்றோர்களுடன் வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடனடியாக பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டவும் கழிப்பறை வசதிகள் செய்து தர கேட்டும் பள்ளியை முற்றுகையிட்டதோடு பள்ளி வாயில் முன் கையில் பதாகைகளுடன் அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



No comments:
Post a Comment