முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 98-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 51 வார்டுக்கு உட்பட்ட உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவில் கலையரங்கத்தில் வைத்து பாஜக பொருளாளரும் 51 வார்டு கவுன்சிலரும் மாநகராட்சி தெற்குமண்டல தலைவருமான டாக்டர் முத்துராமன் அவர்கள் தலைமையில் வாஜ்பாய் அவர்களின் அவரது திரு உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்பு பாரத பிரதமர் மோடி மருத்துவ காப்பீடு திட்டம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜந்து லட்சத்திற்க்கான மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு அதன் விளக்கத்தையும் எடுத்து கூறப்பட்டது. இதில் 50 வார்டு பாஜக கவுன்சிலர் ஜயப்பன், கவுன்சிலர் வீரசூரபெருமாள்,மற்றும் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment