குமரி வனப்பகுதியில் இறந்த நிலையில் யானை அதிகாரிகள் ஆய்வு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 December 2022

குமரி வனப்பகுதியில் இறந்த நிலையில் யானை அதிகாரிகள் ஆய்வு.


கன்னியாகுமரி வனக்கோட்டம் களியல் வனச்சரகத்திற்குட்பட்ட கற்றுவா எனும் பகுதியில் இன்று தனியார் தோட்டத்தில் ஒரு யானை இறந்து கிடப்பதாக தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் தகவல் வெளியானது.


தகவலின் அடிப்படையில் வனச்சரக அலுவலர் முகம்மது மூகைதீன் தலைமையில் மருதம்பாறை பிரிவு வனவர் வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு சென்று தணிக்கை செய்தனர். தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா இ.வ.ப. அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 


பின்பு மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவு படி திருநெல்வேலி வன கால்நடை மருத்துவர்கள் மனோகரன் தலைமையில் அடங்கிய குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி வன பாதுகாவலர் முன்னிலையில் வன கால்நடை மருத்துவர்கள் குழு இறந்த யானையை உடல்கூறு ஆய்வு செய்தனர். 


ஆய்வில் இறந்த யானையானது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை என்றும், வயது முதிர்வு மற்றும் வயிற்று பிரச்சினை காரணமாக இறந்ததாக தெரிவித்தனர். பின்பு அதே இடத்தில் யானையானது புதைக்கப்பட்டது.

No comments:

Post a Comment