கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுகா, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சுங்கான்கடை களியங்காடு பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள முத்தாரம்மன் கோவிலில் கடந்த 100 வருடத்திற்கு மேலாக அனைத்து சமுதாய மக்களிடமும் வரி மற்றும் நன்கொடை பெற்று மேற்படி முத்தாரம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது.
தற்போது மேற்படி முத்தாரம்மன் கோவில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமானது என்றும் இதில் வேறு சமுதாய மக்கள் கலந்து கொள்ள கூடாது என்றும் ஒரு பிரிவினர் தீண்டாமையை கடைபிடித்து தலித் மக்களை வழிபாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று கடந்த 15-12-2022 அன்று கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரையில் புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டம் 100% படித்தவர்கள் வாழும் மாவட்டம் இங்கு தீண்டாமை இல்லை சாதிய பாகுபாடு இல்லை என்றும் தொடர்ச்சியாக அரசும், காவல்துறையும் தெரிவித்து வருகிறது. ஆனால் தலித் மக்கள் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேற்படி முத்தாரம்மன் கோவில் மட்டுமல்லாது சுங்கான்கடை களியங்காடு பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் தலித் மக்கள் தடையின்றி வழிபட அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து தீண்டாமையை கடைப்பிடித்து தலித் மக்களை வழிபாட்டில் பங்கேற்க கூடாது என்று முத்தாரம்மன் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை செயலிழக்க செய்து தாக்குதல் நடத்திய களியங்காட்டை சார்ந்த முருகன் என்பவரது மகன் நடராஜபிள்ளை என்பவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்து மேற்படி பகுதியில் அமைதியை நிலைநாட்டவும் தலித் மக்கள் மீது திணிக்கப்படும் தீண்டாமை வன்கொடுமையை தடுத்து நிறுத்தவும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தமிழக அரசையும், காவல்துறையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது, என தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சுவரொட்டி ஒட்டியுள்ளது.


No comments:
Post a Comment