நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கள்ளக்காதல் விவகாரத்தால் சுமார் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் தான் கொண்டு வந்த கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்து கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தம் கொட்ட கீழே விழுந்தார்.
அப்போது வெளியே சென்று கொண்டிருந்த நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் உடனடியாக கழுத்தறுபட்ட வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். நேசமணி நகர் போலீசார் விசாரணை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



No comments:
Post a Comment