காளிகேசம் காளிஅம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை விழா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 December 2022

காளிகேசம் காளிஅம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை விழா.


கன்னியாகுமரி மாவட்டத்தில் சக்தி வாய்ந்த புனித தலமான காளிகேசம் அருள்மிகு காளிஅம்மன் கோவிலில்  7ம் தேதி புதன்கிழமை பௌர்ணமி பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

காலை 7.00 மணிக்கு பக்திஇசை, 9.00 மணிக்கு  நாதஸ்வர மேளம், 10.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம்,  பகல் 11.00 மணிக்கு: உலக நன்மைக்காக ஶ்ரீலலிதா சகஸ்ரநாம பூஜை, ஶ்ரீலலிதா சகஸ்ரநாம பூஜை பரசேரி சியாமளா விஸ்வேஸ்ரன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. மதியம் 1.00 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 1.30 மணிக்கு அன்னதானம்,   அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. 


இதில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம், கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பேருந்துகளும்  இயக்கப்பட்டிருந்தது.


நிகழ்ச்சிகான ஏற்ப்பாடுகளை காளிகேசம் அருள்மிகு ஶ்ரீகாளிஅம்மன் திருக்கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பௌர்ணமி பூஜை வழிபாட்டுகுழு நிர்வாகிகளுடன் பக்தர்களும்  செய்திருந்தனர். 

No comments:

Post a Comment