மின்கட்டணம் உயர்வு! பால் விலை உயர்வு! விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 December 2022

மின்கட்டணம் உயர்வு! பால் விலை உயர்வு! விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்.

photo_2022-12-09_23-37-23

அதிமுக பொதுச்  செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும்  சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைப்படி விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு மின்கட்டண உயர்வு பால்விலை உயர்வு தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்த திமுக அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் அறிவுரைப்படி இராஜாங்கமங்கலம் ஒன்றியத்தில் புத்தளம் பேரூர் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநகர கிழக்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் ஜெயகோபால், தெற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் முருகேஸ்வரன், மேற்கு பகுதி செயலாளர், ஜெவின்விசுமற்றும் வழக்கறிஞர் அணி செயலாளர் சுந்தரம்  மற்றும் ஒன்றிய, பேரூர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment