
இந்த நிலையில் கால்வாய் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு தடுப்பு சுவர்கள், வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் நேற்று கோர்ட்டு உத்தரவுபடி கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்ராஜா உத்தரவின் பேரில் பூதப்பாண்டி உதவி பொறியாளர் வல்சன் போஸ், தோவாளை தாசில்தார் தாஸ், வருவாய் ஆய்வாளர் அனுதீபா, கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பொக் லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து பூதப்பாண்டி போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment