கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளார் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தக திருவிழா கண்காட்சி வரும் வரை கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஆறாம் நாள் நிகழ்வாக இன்று பத்மநாபபுரம் சார் ஆட்சியர் .எச்.ஆர்.கௌசிக், கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து கவிதா ஜவகர் அன்புக்கு நிகர் அன்பே என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்கள். பாவலர் அறிவுமதி அவர்கள் அறம் சொல் மகிழு என்ற தலைப்பிலும், வரலாற்றுச்சுடர் முனைவர்.கா.பேபி வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பிலும், கவிஞர் தக்கலை ஹலிமா குமரி - மண்ணும் மனமும் என்ற தலைப்பிலும் பேசினார்கள். மேலும், கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பள்ளி, மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கலைப்பண்பாட்டுத்துறையின் பல்சுவை நிகழ்ச்சிகள் வெகு விமர்சியாக நடைபெற்றது.

நிகழ்ச்சியினை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறப்பித்தார்கள். பொதுசுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறையும். மாநகராட்சி. நகராட்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், . பேரூராட்சிகள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
எனவே, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் புத்தகத்திருவிழா கண்காட்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர்.புகழேந்தி, உதவி ஆணையர் (கலால்) .சங்கரலிங்கம். உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை செ.கனகலட்சுமி. உசூர் மேலாளர்கள் .சுப்பிரமணியன், .ஜீலியன் ஹீவர், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் .ராஜேஷ்,, கல்குளம் வட்டாட்சியர் .வெ.கண்ணன், தனி வட்டாட்சியர் .கோலப்பன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment