
அந்த வகையில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு உபகரணங்கள் தமிழக அரசு உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது. பயர் லைன் அமைப்ப தற்கான காற்று அடிப்பான் கருவி, புகை தடுப்பு கண்ணாடிகள், தீக்கவச உடைகள், தீ கவச காலணிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக தீயணைப்பு துறை சார்பில், வனத்துறையின ருக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் படி கீரிப்பாறை வன அலுவலகத்தில் வனவர்கள், வன காவலர்கள் மற்றும் வன பணியாளர்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் காட்டு தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் பல்வேறு வகையான மீட்பு முறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் இமானுவேல், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் துரை, அழகிய பாண்டிபுரம் வனச்சரகர் மணிமாறன் மற்றும் தீய ணைப்பு துறை யினர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment