புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடலின் நடுவே உள்ள ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற் றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.
இதனை காண சுற்றுலா பயணிகள் தினந்தோறும் படகில் சவாரி சென்று பார்க்கலாம். இதற் காக தமிழக அரசும் பூம்புகார் நிறுவனமான கப்பல்போக் குவரத்துக் கழகமும் படகுபோக் குவரத்தை இயக்கி வருகிறது. பொதிகை, குகன், விவேகானந்தர் ஆகிய 3 படகுகள் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வதற்கு பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படகு தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளியின்றி தொடர்ச்சியாக இயக்கப்படும். 2 சொகுசு படகுகள்.


இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடியில் தாமிரபரணி திரு வள்ளுவர் ஆகிய பெயர்களை பெயர்களைக் கொண்ட படகுகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை இயக்கப்பட உள்ள சொகுசுபடகுகள் சுற்றுலாத்துறை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கு பூம்புகார் கப்பல் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடலில் அடிக்கடி ஏற்படும். நீர்மட்டம் தாழ்வு காரணமாக இந்த அதிநவீன படகுகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் பயன்பாடின்றி இருந்தது. அதே சமயத்தில் 2 அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடல் வழியாக இயக்கலாம். பூம்புகார் கழகத்தினர் முடிவு செய்தனர். கன்னியாகுமரிக்கு வரும். சுற்றுலா பயணிகளுக்கு மேலும் வரபிரசாதமாக இருக்கும் என பல்வேறு அமைப்பு கள் கோரிக்கைகள் விடுத்துள்ளார்
அதன்படி 2 அதிநவீன சொகுசு படகுகளையும் இன்று முதல் கன்னியாகுமரியில் இருந்து வட்டக் கோட்டை வரை இயக்கி கடலில் உல்லாச படகுசவாரி நடத்த பூம்புகார் குளு குளு வசதி கொண்ட தாமிரபரணி படகில் பய ணம் செய்ய நபர் ஒன்றுக்கு 1500 வீதமும், திருவள்ளுவர் பெயரை கொண்ட சாதாரண படகில் பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.350 வீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த படகு பயணத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு கடல் வழியாக சொகுசு படகில் பயணம் மேற்கொள்ளும் போது கடலின் அழகையும், கன்னியாகுமரி கடற்கரை யோரத்தின் அழகையும் ரசிக்கும் வகையில் இது சுற்றுலா பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment