முட்டம் கடற்கரை பகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பில் புதிய சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 10 June 2023

முட்டம் கடற்கரை பகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பில் புதிய சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்.


கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறையின் சார்பில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம், முட்டம் ஊராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். தலைமையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் .வ.விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்) செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .பாபு ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,  பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி கல்வெட்டினை திறந்து வைத்து. பேசுகையில்:-தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்  ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை அறிவித்து. அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சுற்றுலாத்துறை மேம்படுத்தும் வகையில் அதிக நிதி ஒதுக்கீடு வழங்கி உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


நமது கன்னியாகுமரி மாவட்டம், இயற்கை சூழ்நிலைகள் நிறைந்த மாவட்டம் ஆகும். ஆரல்வாய்மொழி துவங்கி வட்டக்கோட்டை, கன்னியாகுமரி கடற்கரை பூம்புகார் படகுதளம், லெமூனியார் கடற்கரை, மலைப்பகுதிகளான காளிகேசம், பேச்சிப்பாறை, சிற்றார். திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம் உட்பட சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவரும் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.


அதனடிப்படையில், முட்டம் கடற்கரை பகுதியினை மேம்படுத்தும் வகையில் ரூ.2.85 கோடி மதிப்பில் சுற்றுலா மேம்பாட்டு பணியினை இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில், மாநில அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் சிற்றாறு -2 அணை பகுதியில் ரூ.3.40 கோடி மதிப்பில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும், ரூ.10.22 கோடி மதிப்பீட்டில் திருவள்ளுவர் சிலையில் லேசர் லைட் தொழில்நுட் பணியும், திற்பரப்பு அருவி பகுதியில் ரூ.4.309 கோடி மதிப்பில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் விரைவில் நடைபெற இருப்பதோடு. மாத்தூர் தொட்டிப்பாலம் பகதியில் சுற்றுலா மானிய கோரிக்கையில் ரூ.3 கோடி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள நிதிஒதுக்கீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு  பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  தெரிவித்தார்.


நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் .தொ.சதீஸ்குமார், மேலாளர். தமிழ்நாடு ஹோட்டல் கன்னியாகுமரி .உதயகுமார். குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அனுஷா தேவி, கல்குளம் வட்டாட்சியர் .கண்ணன், குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் .கீதா, லெட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் பி.எஸ்.பி.சந்திரா. முட்டம் ஊராட்சி மன்ற தலைவர் .நிர்மலா. துணைத்தலைவர் ஜெரால்டு ராபர்ட், ஜோசப் ஸ்டாலின், பங்குத்தந்தையர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள். பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 

No comments:

Post a Comment