சீதப்பாலில் ரூபாய் 4 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடை விஜய் வசந்த் எம்பி திறந்து வைத்தார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 July 2023

சீதப்பாலில் ரூபாய் 4 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடை விஜய் வசந்த் எம்பி திறந்து வைத்தார்.


மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரிடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் சீதப்பால் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்க்கூடை  அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். அவர் மறைவிற்கு பிறகு தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய்வசந்த் அதனை நிறைவேற்றும் விதமாக  தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 3 லட்சத்து 90 ஆயிரம் ஒதுக்கப்பட்டது அதற்கான பணி நிறைவடைந்து நிழற்குடை திறப்பு விழா (17-07-2023) அன்று நடைபெற்றது. 

இந்த தாழக்குடி பேரூராட்சி தலைவர் சிவக்குமார் தலைமையில், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம், பேரூராட்சி துணைத்தலைவர் எஸ். என். ராஜா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் விஜய்வசந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து  அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் திருஉருவ படத்திற்கு  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டினை திறந்துவைத்து சிறப்புரையாற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். 

No comments:

Post a Comment