பரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் முன்னெடுப்பில் பாரதிய கட்சி கன்னியாகுமரி மாவட்ட மகளிர் அணி சார்பாக சிறுதானிய உணவுத் திருவிழா நாகர்கோவில் நாகராஜகோயில் முன்பு கிழக்கு ரத வீதியில் நடை பெற்றது .பாரதீய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில தலைவர் உமாரதிராஜன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் மீனாதேவ் அவர்கள் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள் . மேலும் மாவட்ட பொருளாளர் திரு முத்துராமன், மாவட்ட ஜடி பிரிவு சந்திரசேகர் மாவட்ட பொதுசெயலாளர் ஜெகநாதன் மாவட்ட செயலாளர் நகரதலைவர் ராஜன், நாகர்சோவில் 24 வார்டு கவன்சிலர் ரோசிட்டா திருமால் கிழக்கு மண்டல மகளீர்அணி தலைவி அபிராமி மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த சிறுதானிய உணவு திருவிழாவில் பாரம்பரியமிக்க உணவு வகைகள் மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகள் சமைத்து காட்சிப்படுத்தி பள்ளி குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

No comments:
Post a Comment