கன்னியாகுமரியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 25 July 2023

கன்னியாகுமரியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது.


கன்னியாகுமரி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 23.07.2023 ம் தேதி இரவு நேரத்தில் கத்தி வைத்துக்கொண்டு பொது மக்களை மிரட்டி விகோனந்தபுரம் கனரா பேங்க் ATM முன்பு , சுனாமி காலனி சால்வேசன் ஆர்மி தெருவில் உள்ள வாட்டர்டேங் முன்பு மற்றும் லூர்து மாதா குருசடி பின்புறம் ஆகிய பகுதிகளில் வைத்து மூன்று நபர்களை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த எதிரிகளான 1. கான்ஸ்டின் ராபின் ( எ ) லக்ஸ் -21 , த / பெ . சேசு டி ரோஸ், கோவில் தெரு, சின்னமுட்டம், கன்னியாகுமரி, 2.ஜெப்ரின்-21 , த / பெ . டேவிஸ், சுனாமிகாலனி, முருகன் குன்றம், கன்னியாகுமரி ஆகியோர்களை தகவல் கிடைக்கப்பெற்ற உடனே கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை திரு.மகேஸ்குமார் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தும் கொலை முயற்சி செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றியும் மேற்படி எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது இது போன்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment