கன்னியாகுமரி மாவட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் சார்பாக முப்பெரும் விழா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 July 2023

கன்னியாகுமரி மாவட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் சார்பாக முப்பெரும் விழா.


கன்னியாகுமரி மாவட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் சார்பாக முப்பெரும் விழா மற்றும் அமைப்பு ரீதியான ஆலோசனைக் கூட்டம்  நாகர்கோவில் கெங்கா  கிரான்ட்யூர் திருமண மண்டபத்தில் வைத்து மூத்த துணை தலைவர் பாரத் சிங் தலைமையில் தமிழ்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.

இதில் கன்னியாகுமரி மாவட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் குடும்பத்தில் இறைவனடி சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் அவர்கள் குடும்பத்தில் திருமணம் நடைபெற்ற மணமக்களை வாழ்த்துவதும் அவர்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் 10 ,12 வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர் அதன்பின் தீயணைப்பு மீட்புத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீயணைப்பு மற்றும் அவசர கால நடவடிக்கைகளை பற்றிய வகுப்புகளும் செய்முறை விளக்கங்களும் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் தலைவர் ரவீந்திரன், பொருளாளர் வெங்கடசுப்பிரமணியன், அமைப்புச் செயலாளர் பகவதி பெருமாள் பிள்ளை, துணை தலைவர் பாலசிங், துணைச் செயலாளர் யூசுப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment