கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக இளைஞரணி மாநாடு விளக்க இருசக்கர வாகன பேரணியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 16 November 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக இளைஞரணி மாநாடு விளக்க இருசக்கர வாகன பேரணியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார். இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.


இந்த மாநாட்டுக்கான ஆயத்த பணிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை இளைஞரணி நிர்வாகிகள் மூலம் நடத்தி வருகிறார்.


இதன் அடுத்த கட்டமாக இப்போது இளைஞரணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இருசக்கர வாகன பிரசாரத்தை கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.


இந்த இருசக்கர வாகன பிரசார பேரணியில் 188 மோட்டார் சைக்கிள்கள் செல்கின்றன. இந்த பேரணி 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்ல உள்ளது. இன்று தொடங்கி உள்ள இருசக்கர வாகன பேரணியானது மொத்தம் 13 நாட்கள் பயணித்து வருகிற 27-ந்தேதி முடிவடைகிறது.


தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி 504 பிரசார மையங்கள், 38 தெருமுனை பிரசாரங்கள் நடைபெற உள்ளது. இருசக்கர வாகன பிரசாரப் பேரணி செல்லும் மாவட்டங்கள் வள்ளுவர், பெரியார், அண்ணா, கலைஞர் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8ஆயிரத்து 647கிலோமீட்டர் பயணித்து சுமார் 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

No comments:

Post a Comment