மதுவிலக்கு அமல்பிரிவு வழக்குகளில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்.  - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 17 November 2023

மதுவிலக்கு அமல்பிரிவு வழக்குகளில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம். 

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 42 வாகனங்கள் ஏலம் 21-ந்தேதி காலை 11 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும். 


இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்று காலை 8 மணிக்கு ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். ஒரு வாகனத்தை ஏலம் எடுத்த பிறகு மற்றொரு வாகனத்தை ஏலம் எடுக்க வேண்டும் என்றால் மீண்டும் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.


நுழைவு கட்டணம் ரூ.10 செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்துக்கு ஏல தொகையுடன் சேர்த்து 18 சதவீத ஜி.எஸ்.டி.யை ஒரு வாரத்துக்குள் செலுத்தி எடுத்துக்கொள்ளலாம். ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தியவர்கள் வாகனத்தை ஏலம் எடுக்கவில்லை என்றால் முன்பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை (நாகர்கோவில்) 04652-220377, தக்கலை-04651-271198, துணை போலீஸ் சூப்பிரண்டை 04651-224833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment