சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 10 நாள் மார்கழி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. மார்கழி விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 5-ம் திருவிழாவான இன்று முக்கிய நிகழ்வான கருட தரிசனம் நடைபெற்றது.

விழாவில், அதிகாலை 5 மணியளவில் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் தரிசனம் நடைபெற்றது. வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன் தாணுமாலய சுவாமி, அம்பாள்,பெருமாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கிழக்கு நோக்கி எழுந்தருளினர்.அந்நேரத்தில், அவர்களைச் சுற்றி கருடன் வலம் வரும் கருட தரிசனம் நடைபெற்றது. இதை காண்பதற்கு சுசீந்திரம் கோயில் வளாக பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
பின்னர், இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி ரதவீதியை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. கருட தரிசனத்துக்கு அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment