நியூஸ் 7 சேனல் செய்தியாளர் தாக்குதல்; தமிழ் நாடு வணிகர்கள் மகாஜன சங்க கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 January 2024

நியூஸ் 7 சேனல் செய்தியாளர் தாக்குதல்; தமிழ் நாடு வணிகர்கள் மகாஜன சங்க கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை.


திருப்பூர், பல்லடம் நியூஸ் 7 சேனல் செய்தியாளர் நேசபிரபு, உள்நோக்கம் காரணமாக மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு, கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். தனக்கு மர்ம நபர்களால் ஆபத்து இருக்கிறது என அவர் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும், அவர்கள் அலட்சியமாக இருந்ததன் விளைவு, தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜனநாயகத்தின் நான்காம் தூணாகிய பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் கைகளில் தான் உள்ளது'. அதையும் மீறி பல சமயங்களில் அவர்கள் தாக்கப்படுவதும், கொச்சைப்படுத்தப்படுவதும் அநாகரிகமாக பேசப்படுவதும் பல இடங்களில் தொடர்ந்து நடக்கிறது.


பத்திரிகையாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் தாக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் இது போன்ற தாக்குதல்கள் வராமல் தவிர்க்க முடியும். 


செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இனியும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறாமல் இருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு வணிகர்கள் மகாஜன சங்க கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராஜன்  அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment