குடியரசு தின ஒத்திகை போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 January 2024

குடியரசு தின ஒத்திகை போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.


குடியரசு தின ஒத்திகை போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது. இதில் போலீசார், தீயணைப்பு படையினர், என்.சி.சி. மாணவர் படை யினர் கலந்து கொண்ட னர். இதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விழா நடைபெறும் மைதானத்தில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அண்ணா விளை யாட்டு அரங்க வாசலில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டு உள்ளது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குடியரசு தினத்தை ஒட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  உத்தரவின் பேரில் பாதுகாப்பு பணி யில் 1200 போலீசார் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment