திருவட்டாரில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த தாசில்தார் முன்னிலையில் வாலிபர்கள் மீது தாக்குதல் பரபரப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 January 2024

திருவட்டாரில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த தாசில்தார் முன்னிலையில் வாலிபர்கள் மீது தாக்குதல் பரபரப்பு.

திருவட்டார் அருகே உள்ள மாத்தூர், கோயில்விளை பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் சுமார் 54 சென்ட் பரப்பளவில் தீ குச்சி ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. தொழில் நஷ்டம் காரணமாக அதன் உரிமையாளர் அதனை விட்டு விட்டு தலைமறைவாக சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து காணப்பட்டு  விச ஜந்துக்களின் இருப்பிடமாகவும் சமுக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் புகலிடமாகவும் இருந்துள்ளது. காலப்போக்கில் அங்கிருந்த கட்டிடங்கள் உடைந்து விழுந்து பயனற்றதாக இருந்துள்ளது.

இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சமப்படுத்தி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். காலை, மாலை நேரத்தில் நடை பயிற்சியில் ஏராளமானோர் ஈடுபட்டு வந்துள்ளனர். இளைஞர்கள் 1994 முதல் மகாத்மா  இளைஞர் மன்றம் என்ற ஒன்றை ஏற்படுத்தி விளையாட்டு போட்டிகள் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சமீப காலமாக அப்பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் அதனை கையகப்படுத்தும் நோக்கத்துடன் விளையாட செல்லும் வாலிபர்களை விரட்டியடித்து வந்துள்ளனர். அதோடு அதனை கோயில் சொத்தாக மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது சம்மந்தமாக தக்கலை டிஎஸ்பி, திருவட்டார் தாசில்தார் ஆகியோரிடம் இளைஞர் மன்றத்தினர் புகார் தெரிவித்தனர். புகார் சம்மந்தமாக சம்மந்தப்பட்ட இடத்துக்கு சென்ற தாசில்தார் விசாரணைக்கு இரு தரப்பினரையும் அழைத்துள்ளார்.


அப்போது அங்கு விசாரணைக்கு வந்த இளைஞர் மன்ற நிர்வாகிகளை ஒரு பிரிவினர் தாசில்தார் முன்னிலையில் தாக்கியுள்ளனர். இதில் இளைஞர் மன்றம் நிர்வாகிகள் மாத்தூர், கோழிபுரத்துவிளை பகுதியை சேர்ந்த அர்சத் (23), பிளசட் சிங் (23) ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் குலசேகரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுவிட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் கேமராக்களில் கேமராக்களில் பதிவாகி சமுக வலைதளங்களில் வைரல் ஆனது.        


இதனையடுத்து திருவட்டார் போலீசார் இளைஞர் மன்ற நிர்வாகிகளை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த சௌந்தர்ராஜ் (48), கணேசன் (40), ஜெயக்குமார் (38), நெல்சன் (42), பெர்லின் (51), ராமசந்திரன் என்ற உண்ணி (60), சுஜின் (32) உட்பட 12 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு குற்றவாளிகளை  வலை வீசிதேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment