தமிழக காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 5 January 2024

தமிழக காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை.


இந்தியாவில் மதச்சார்பற்ற நடுநிலையான அரசு 2024ல் அமைய வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் முதற்கட்டமாக கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை பாதயாத்திரை முடித்து விட்டு அடுத்து இரண்டாம் கட்டமாக பாதயாத்திரை தொடங்க இருக்கும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ராகுல் காந்தி அவர்கள் பிரதமராக வரும் நாள் தான் இந்தியாவின் பொற்காலம் என்று அனைத்து மக்களும் காத்திருக்கிறார்கள்.

அனைத்து தரப்பு மக்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அதற்கான முழு முயற்சி எடுத்து அனைத்து மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி மதச்சார்பற்ற அரசு அமைய விருப்பு வெறுப்பின்றி மன மாற்றங்களை கடந்து அனைவரும் இணைத்து  ஒன்றிணைவதின் நோக்கத்தைகூறி இந்தியா கூட்டணியை வலுவானதாக உருவாக்கிட வழி வகை செய்திட வேண்டும்.மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஸ்தரதன்மையுடன் வலுவாக இருந்தால் வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு வலுவான போட்டியை கொடுத்து வெற்றி பெற முடியும் அதனால் இதனை முறியடிக்கும் நோக்கில் பாரதீய ஜனதா கட்சி இந்தியா கூட்டணியை கடைசி நேரத்தில் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.


எனவே  பாரதிய ஜனதாவின் பகல் கனவிற்கு பக்க வாத்தியம் வாசிக்கும் வகையில் இந்தியா கூட்டணியில் தற்போது இருக்கும் சில கட்சிகளின் தலைவர்கள்  தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் சில முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.


எனவே விரைவில் இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் பதவிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தவிர்த்து விட்டு மாற்று கட்சியிலிருந்து வேறு ஒரு தலைவரை முன்னிறுத்த ஒரு சில கட்சிகளின் தலைவர்கள் நினைப்பது பொங்கி வரும் சோற்று உலைப் பானையில் மண்ணை அள்ளிப் போடுவது போன்ற செயலாக தான் கருத வேண்டி உள்ளது.


கடந்த பத்து ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியின் தவறுகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்து சுட்டி காட்டி அனைத்து போராட்டங்களையும் முன்னின்று நடத்திக் காட்டியவர் தான் இளம் தலைவர் ராகுல் காந்தி எனவே பாரதிய ஜனதாவின் அடக்கு முறைகளை கண்டு பயப்படாமல் துணிச்சலாக இந்தியா முழுவதும்  கொண்டு சென்று மக்களை சந்தித்து நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டு வரும் இளம் தலைவர் ராகுல் காந்தியின் முயற்சிக்கு அனைத்து தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்கி இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக பிரதமர் பதவிக்கான பொது வேட்பாளராக இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களை முன்னிறுத்த முன் வர வேண்டும்.அவ்வாறு ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கான பொது வேட்பாளராக முன்னிறுத்த முயலாமல் தங்களை முன்னிறுத்த துடிக்கும் தலைவர்களை இந்தியா கூட்டணியில் இருந்து  வெளியேற்ற வேண்டும்.


காங்கிரஸ் கட்சி எத்தனையோ சோதனைகளை சாதனை ஆக்கி தேர்தலின் போது சந்தித்து பல வெற்றிகளை பெற்றிருக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க  முன் வராத பட்சத்தில் அந்த கட்சிகளை இந்தியா கூட்டணியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.இந்த கள்ளி செடிகளை முளையிலேயே கிள்ளி எரிந்து 2024 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தான் என்பதை உறுதி செய்ய வேண்டும்.என தமிழக காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு சார்பில் கேட்டு கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment