குமரியில் கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் முறையான ஆவணங்கள் உள்ள கனரக வாகனங்களை மட்டும் குறித்த நேரத்தில் அனுப்புவதற்கான சோதனை போலீசாரால் முறைப்படுத்துள்ளதால் தோவாளை நெடுஞ்சாலை மயிலாடி விலக்கு பகுதியில் வாகனங்கள் காத்து நிற்கின்றன இந்த சோதனையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வரும் டவுன் பேருந்துகள் நாகர்கோவில் பைபாஸ் சாலை குமரன்புதூர் விலக்கு நான்கு வழிச்சாலையில் வழியாக ஆரல்வாய்மொழிக்கு வந்து சேர்வதால் தோவாளை பாய்ண்ட் தடைப்படுகிறது, இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் பல மணி நேரம் அப்பகுதி பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தில் காத்து நிற்கின்றனர், உடனடியாக அவர்கள் வீட்டுக்கு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post Top Ad
Thursday, 22 February 2024
Home
தோவாளை
கனரக வாகனங்களின் ஆவணம் சரி பார்ப்பால், பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல முடியாமல் தோவாளை பேருந்து நிறுத்தத்தில் காத்து நிற்கும் மாணவிகள்-பெற்றோர் பதற்றம்.
கனரக வாகனங்களின் ஆவணம் சரி பார்ப்பால், பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல முடியாமல் தோவாளை பேருந்து நிறுத்தத்தில் காத்து நிற்கும் மாணவிகள்-பெற்றோர் பதற்றம்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment