அருமநல்லூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 22 February 2024

அருமநல்லூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்.


கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் பகுதியில் அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்திய தங்களது வீடுகளை மீண்டும் மீட்கும் வரை உண்ணாவிரதம் என்ற தகவல் அறிந்த,  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், விஜய்வசந்த் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கபட்ட மக்களை சந்தித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் ஊராட்சி பகுதியில், செக்கடி கிராமத்தில் சுமார் 80 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த பொதுமக்களின் வீடுகளை அதிகாரிகள் ஜேசிபி கொண்டு இடித்து அப்புறப்படுத்திய நிலையில் அங்கு குடியிருந்த மக்கள் தங்களுக்கு மீண்டும் அங்கு வீடுகள் கிடைக்கும் வரை இங்கிருந்து நகர்ந்து செல்ல மாட்டோம் என சாகும் வரை பட்டினி போராட்டத்தில் ஈடுபட போவதை அறிந்தார்.


இந்நிலையில் தகவல் அறிந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கபட்ட மக்களை சந்தித்து பேசினார் மேலும் அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுப்பதாக கூறினார் இதில் காங்கிரஸ் வட்டார தலைவர் திரு.செல்வராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment