நாடாளுமன்ற தேர்தல் குழுவின் கருத்துகள் கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 6 February 2024

நாடாளுமன்ற தேர்தல் குழுவின் கருத்துகள் கேட்பு கூட்டம் நடைப்பெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின்படி 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களின், தொழிற்சங்கங்கள், வியபாரிகள் சங்கம், விவசாயிகள் சங்கம், மீன் பிடிப்போர் நலச்சங்கங்கள், மேலும் பல நலச்சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர்களின் நீண்டக்கால கோரிக்கைகளை மனுக்களை பெற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற தேர்தல் குழு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி.எம்.பி, தலைமையில் நாகர்கோவில் தேரேகால்புதூர் பகுதியில் அமைந்துள்ள கெங்கா கிராண்டியூர் திருமண மண்டபத்தில் வைத்து "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" தமிழ்நாட்டின் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டி கருத்துகள் கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. 

உடன் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் மேயர் ரெ.மகேஷ்குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்  அவர்களும் இணைந்து குமரி மாவட்ட அனைத்து சங்கபிரதிநிதிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment